தேசிய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 பிப்ரவரி, 2026

தேசிய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய நகராட்சி வளாகம் அருகே தேசிய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திறனற்ற திமுக கட்சி ஆளும் அரசை கண்டித்து நேற்று (10.02.2026) மாலை 6 மணியளவில் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் திருமதி. முனைவர் மோகனப்பிரியா சரவணன் தலைமையில் நடைபெற்றது.. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் சிறப்புரையாற்றினார், மேலும்

அ.தி.மு.க அவைத்தலைவர் பி.கே.ராஜ்,அதிமுக மாவட்ட பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிசாமி,தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளிதாஸ்,அம்மா முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரும் முன்னால் அமைச்சருமான சண்முகவேல், 

பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமார்,

பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் பிரவீன் மற்றும் பொதுமக்கள்,பெண்கள் அனைத்து கட்சியை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் சுமார் 500 மேற்பட்டோர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதிவு செய்தனர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad