உழவர் பெருந்தலைவர் சி .நாராயணசாமி நாயுடு அவர்களின் 102 இரண்டாவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூரில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள தலைமை செயலகத்தில் சங்க நிறுவன தலைவர் ஜி.கே.விவசாயமணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இரவு 7 மணி அளவில் நடைபெற்ற பொதுக்கூட்ட விழாவினை சங்கத்தின் தலைமை ஆலோசகர்
சென்னியப்பன் அவர்கள் துவக்கி வைத்தார் சிறப்பு விருந்தினராக கோவை காமாட்சிபுரி ஆதீன நடராஜ ஸ்சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார் மாநில இயற்கை வேளாண்மை பிரிவு தலைவர் முத்துசாமி அவர்கள் வழங்கிய வாழ்த்துரையில் இயற்கை விவசாயத்தை முழு மனதோடு அனைவரும் ஏற்க வேண்டும் போராட்ட குணம் என்பது விவசாயிகளிடையே உணர்வுகளில் ஒன்றி இருக்கிறது ஒற்றுமை தான் நம்முள் ஓங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் சங்க பேச்சாளர் முகவை கண்ணன் நாராயணசாமி அவருடைய அரசியல் நிகழ்வை பகிர்ந்து கொண்டார் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீனிவாசன் ஆன்மீக குழு தலைவர் முருகானந்தம் தாராபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் இரமேஷ் குமார் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் குருநாதன் 25 ஆவது வார்டு தொழிற்சங்க பிரிவு தலைவர் இரமேஷ், வீரலட்சுமி அன்னக்கொடி சாரதா உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள் முன்னதாக கலை மாமணி
இராதாகிருஷ்ணன் தலைமையில் வீரவர்மன் சிலம்பாட்ட குழுவினர் நிகழ்ச்சிகள் நடத்தினர் கியோகுசின் கராத்தே மாஸ்டர் குமரவேல் முருகேஷ் தலைமையில் கராத்தே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது சக்சஸ் அகாடமி பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இரவு 9 மணி அளவில் பூராண்டம்பாளையம் மணி பரமகுருசாமி தலைமையிலான வள்ளி கும்மி கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன நிகழ்ச்சியினை தலைமை சங்க நிர்வாகி ஹேமா பிரியா தொகுத்து வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் வீர விளையாட்டுகள் நிகழ்த்தியவர்களுக்கு தலைவர் ஜிகே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் வாழ்த்துக்களை கூறி பரிசுகளை வழங்கினார் தலைமை நிலைய செயலாளர் நாகேந்திரன் அவர்களின் நன்றி உரையோடு சி.நாராயணசாமி நாயுடு ஐயா அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இனிதாய் நிறைவுற்றது விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இரவு
உணவளிக்கப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக