திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட 208 பெண்களுக்கும் சேலை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மேற்கு ஒன்றியம் குதிரைமொழி ஊராட்சி எள்ளுவிளை (எ) கோவில்விளை ஸ்ரீ நாராயண சுவாமி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் ஆண்டுவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 208 பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் தொழிலதிபர் கார்த்திகை நாடார் மகேஸ்வரி குடும்பத்தினர் சார்பில் சேலை வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவரும், உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான டிபி. பாலசிங் சிறப்பாக செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் எல். பி. முத்து குமரன்,முருகேசன், ராஜேந்திரன், பொண்ணுலிங்கம், ஜெகதீஸ்வரன், தர்மபால், ஜெயபால், அணீஸ் கலைசெல்வன் மற்றும் ஊர் பிரமுகர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக