கன்னியாகுமரி இந்து அறநிலைதுறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 60 ஆண்டுகளாக கடை நடத்துவதற்கு அனுமதியும் கடைக்கு வாடகையும் நகராட்சிக்கு தொழில் வரி பாக்கி இல்லாமால் சிறு கடை வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேற்படி இந்து அறநிலைதுறை, நகராட்சி அதிகாரிகள் உச்சநீதிமன்ற கட்டளை பின்பற்றாமல் சட்டவிரோத செயலில் இந்து அறநிலைதுறை அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும் சட்டவிரோதமாக செயல்படுகின்றனர் என சிறு கடை வியாபாரிகள் குற்றசாட்டுகளை முன்வைக்கின்றனர்.
தொடர்ந்து சிறு கடை வியாபாரிகள் சட்டவிரோதமாக அகற்ற கூடாது கடைநடத்த மாற்று இடம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிறு கடை வியாபாரிகளின் போராட்டத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5000 குடும்பங்களின் வாழ்வதாரம் கேள்வி குறியாக உள்ளது
உடனடியாக தமிழக அரசும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை சிறுகடை வியாபாரிகளின் வாழ்வாரதத்தை பாதுகாக்க வேண்டும் என சிறு கடை வியாபாரிகள் சங்கம்
கோரிக்கையை முன் வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக