தூத்துக்குடி - காவல்துறை துரித நடவடிக்கையால் காணாமல் போன 2 சிறுமிகள் கண்டுபிடிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி - காவல்துறை துரித நடவடிக்கையால் காணாமல் போன 2 சிறுமிகள் கண்டுபிடிப்பு.

தூத்துக்குடி - காவல்துறை துரித நடவடிக்கையால் காணாமல் போன 2 சிறுமிகள் கண்டுபிடிப்பு.

தூத்துக்குடி தனியார் பள்ளியில் பயின்று வரும் மிசேல் D/O மைக்கேல் கபாஸ்கர், சிலோ D/O பிரைட்டன் ஆகியோர், இன்று 11.02.2026 மாலை 5 15 மணியளவில் தாமஸ் நகர் 7 வது தெரு மிசேல் என்பவரின் வீட்டின் அருகில் வைத்து ஆளுக்கு ஒரு சைக்கிளில் விளையாடி கொண்டிருந்தனர்.

சுமார் மாலை 5.45 மணியளவில் மிசேல் - இன் பெற்றோர் வந்து பார்க்கும் போது இரண்டு சிறுமிகளையும் காணவில்லை, மேலும் இரண்டு சைக்கிளில் ஒரு சைக்கிள் மட்டும் அவ்விடத்தில் இருந்துள்ளது. அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் குழந்தைகள் காணவில்லை.

இதனால் பதறிப்போன பெற்றோர்கள் தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  தகவலறிந்த உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இரவு 8.30 மணி அளவில் தூத்துக்குடி பிரபல கடைக்கு முன்னர் காணாமல் போன மாணவிகளை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad