ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட பதி அவதாரதின கருடசேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 பிப்ரவரி, 2026

ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட பதி அவதாரதின கருடசேவை.

ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட பதி அவதாரதின கருடசேவை. 

ஸ்ரீவைகுண்டம் பிப்ரவரி 11. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் முதலாவதான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் உள்ள மூலவர் வைகுண்டபதி அவதார தினமான தை அனுஷம் நட்சத்திரத்தில் இன்று கருடசேவை நடந்தது. 

காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 9.30 மணிக்கு மூலவர் வைகுண்டபதி பால் திருமஞ்சனம். 11 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் சயனக் குறட்டிற்கு எழுந்தருளினார். சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 11.45 மணிக்கு தீபாராதனை. 12 மணிக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 

சீனிவாசன். ‌ பார்த்தசாரதி. ஆகியோர் சேவித்தனர். 12.30 மணிக்கு சாத்து முறை கோஷ்டி தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6.30 மணிக்கு மூலவர் வைகுண்டபதிக்கு உற்சவர் அணியும் அனைத்து ஆபரணங்களும் வருடத்தில் ஒரு நாள் அணிவிக்கப்பட்டு இயற்கை விளக்கு ஒளியில் தீபாராதனை நடந்தது. 

8.15 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் வாகன மண்டபம் எழுந்தருளி கருடவாகனத்தில் மாலைகள் மாற்றப்பட்டு 9.30 மணிக்கு காட்சி அளித்தார். பின்னர் வீதி உலா நடந்தது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். வாசு. நாராயணன். ராமானுஜம். சீனு ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன். திருவேங்கட த்தான். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நிஷாந்தினி 

அறங்காவலர் குழு தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன் முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன். 

உபயதாரர் கள் சீனிவாசா அறக்கட்டளை மற்றும் வக்கீல் சந்திரசேகர் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad