பல்வேறு பணிகளை அமைச்சர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 பிப்ரவரி, 2026

பல்வேறு பணிகளை அமைச்சர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்!

பல்வேறு பணிகளை அமைச்சர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்!
திருவண்ணாமலை ,பிப் 11 -

திருவண்ணாமலை  மாவட்டம் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் நேரில் சென்று பல்வேறு  முடிவுற்ற பணிகளுக்கு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தும் புதிய திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து வைத்து அடிக்கல் நாட்டினார்.  
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பூண்டி - பழங்கோயில்  இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் புதுப்பாளையம் பேரூராட்சி யில் ரூ.4.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப் படவுள்ள புதிய பேருந்து நிலையம் அமை க்கும் பணியை அடிக்கல் நாட்டினார்.செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  மண் மலையில்  1.செங்கம் புறவழி சாலை, 2.தண்டராம்  பட்டு புறவழி சாலை, 3.கீழ் சிறுப்பாக்கம் புறவழி சாலை ஆகிய மூன்று புறவழிச் சாலைகள் அமைக்கும் பணி துவக்க விழா மற்றும் செங்கம் நகரம், தோக்க வாடி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.  
முடியுற்ற பணிகளை திறந்து வைத்தும் மேற்கண்ட புறவழிச் சாலை பணிகளை யும் துவக்கி வைத்தார்.உடன் இந்நிகழ் வில், தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி., மாவட்ட கழக துணை செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி.MLA CN.அண்ணா துரை.MP, மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்பகராஜ்.இ.ஆ.ப., மற்றும்  அரசு அலுவலர்கள் , நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் - கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad