நாசரேத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

நாசரேத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு.

நாசரேத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி அருகில், மெயின் ரோட்டில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி பங்களிப்பு மற்றும் பேரூராட்சி பொது நிதியில் இருந்து புதிதாக பயணியர் நிழற்குடை, பேவர் பிளாக் நடை பாதை, ஐ லவ் நாசரேத் என்ற வாசகம் அடங்கிய செல்ஃபி பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

சிறப்பு விருந்தினராக தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை மற்றும் ஐ லவ் நாசரேத் என்ற வாசகம் அடங்கிய செல்ஃபி பாயிண்ட் ஆகியவற்றை திறந்து வைத்தார். 

இந் நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. கவுதம், பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி, பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார், துணை தலைவர் அருண் சாமுவேல், பல்வேறு கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad