இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாகக் கன்னியாகுமரிக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
இதற்காக நிலங்களை ஆர்ஜிதம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை மற்றும் ராதாபுரம் தாலுகாக்களில் நிலம் கையகப்படுத்துவது குறித்த அறிவிப்பைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள விஜயாபதி, செட்டிகுளம், இருக்கன்துறை (பகுதி-1, பகுதி-2), கூடங்குளம், திருவம்பலாபுரம் மற்றும் திசையன்விளை தாலுகாவில் உள்ள குட்டம், கரைசுத்து உவரி, கரைசுத்து புதூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள நிலங்கள், தேசிய நெடுஞ்சாலைச் சட்டப்படி இப்புதிய சாலை அமைக்கும் பணிக்குத் தேவைப்படுகின்றன.
இது தொடர்பான நில விவரங்கள் மற்றும் வரைபடங்களை, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நேரில் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக