ஸ்ரீவைகுண்டம் பிப்ரவரி 23. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் இரண்டாம் திவ்ய தேசங்களில் ஒன்றான நத்தம் (வரகுண மங்கை) கோவிலில் இன்று புஷ்பாஞ்சலி நடந்தது.
கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. திருவிழா முடிந்த 12 ம் நாள் இன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 9 மணிக்கு நித்தியல். 11 மணிக்கு உற்சவர் எம்இடர்கடிவான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் சயனக் குறட்டிற்கு எழுந்தருளினார்.
11.30 மணிக்கு மல்லி. பிச்சி . தாமரை . துளசி. பச்சை வாடாமல்லி. ரோஸ். செவந்தி வெள்ளை. மஞ்சள் . அரளி வெள்ளை. சிவப்பு. பன்னீர் பூ போன்ற 12 விதமான பூக்கள் உற்சவர் முன் அலங்கரிக்கப்பட்டது.
1 மணிக்கு ஒவ்வொரு பூக்களையும் அர்ச்சகர்கள் கோவிந்தன். கண்ணன் .வெங்கடாசலம். ரகு. ராஜகோபாலன். கிருஷ்ணன் . ஆகியோர் சுவாமியிடம் சாத்தினார்கள். 2.45 மணிக்கு தீபாராதனை நெய்வேத்யம் செய்யப்பட்டது.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சீனிவாசன். மதுரகவி. கண்ணன். கிருஷ்ணன் .ஆகியோர் சேவித்தனர். 3.30 மணி அளவில் சாத்து முறை கோஷ்டி தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நிஷாந்தினி அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா மற்றும் உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். பேக்கிரி முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக