நாகர்கோவில் - கழிவு நீர் நிரம்பி சாலை வழியாக செல்லும் காட்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

நாகர்கோவில் - கழிவு நீர் நிரம்பி சாலை வழியாக செல்லும் காட்சி.

கழிவு நீர் நிரம்பி சாலை வழியாக செல்லும் காட்சி 

நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக் குழந்தைகள் செல்லும் சாலையில். கழிவு நீர் நிரம்பி சாலை வழியாக செல்வதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்.

சுகாதார சீர்கெடும் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியை சரி செய்ய வேண்டும் என்று அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் மாநில துணைத்தலைவரும் மாவட்ட தலைவருமான வழக்கறிஞர் சதீஷ் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார். 

இல்லையென்றால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad