kanniyakumari மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் தலைமையில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

kanniyakumari மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் தலைமையில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் தலைமையில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உறுதிமொழி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒழிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். 

குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தமிழ்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறினார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad