பாறசாலை - திடீரென வானத்தை நோக்கி உயர்ந்து சுழன்ற தூசுச் சுழல் பொதுமக்கள் அச்சம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

பாறசாலை - திடீரென வானத்தை நோக்கி உயர்ந்து சுழன்ற தூசுச் சுழல் பொதுமக்கள் அச்சம்!

திடீரென வானத்தை நோக்கி உயர்ந்து சுழன்ற தூசுச் சுழல் பொதுமக்கள் அச்சம்!

கன்னியாகுமரி மாவட்ட எல்லையை ஒட்டிய கேரள மாநிலத்தின் பாறசாலை பகுதியில் திடீரென வானத்தை நோக்கி உயர்ந்து சுழன்ற தூசுச் சுழல் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. 

பிற்பகல் நேரத்தில் ஏற்பட்ட இந்த இயற்கை நிகழ்வு சில நிமிடங்கள் நீடித்து, சுற்றியிருந்த தூசி மற்றும் இலைகளை மேலே தூக்கி வீசியது. 

வானில் சுழன்று எழுந்த காட்சி பலரையும் பதற்றமடையச் செய்தது. எனினும், பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad