திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் 20 /02 /2026 இன்று கைத்தறி மற்றும் விசைத்தறிக்கு வழங்கப்படும் நூல்களின் மூலப்பொருளான கழிவு பஞ்சு விற்பனையில் டென்டர் முறையை அமல்படுத்தவும் மற்றும் LT 51 KW முதல் 150 KW வரை ஒரே நிலை கட்டணம் அமல்படுத்த வேண்டும், எனவும் LT நிலை கட்டணம் HT டிமாண்ட் சார்ஜ் இரண்டையும் 50% குறைக்க வேண்டும் எனவும் சோலார் மின் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என கோரி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரணம்பேட்டை பகுதியில் RTF மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு சார்பாக சேர்மன் ஜெயபால் அவர்களின் தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு மாநில முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்க கோரிக்கை தெரிவித்து வருகின்றனர் , எங்களது கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு செவி சாய்த்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.
இதில் RTF கூட்டமைப்பு சார்பாக கிரே நூலை உற்பத்தி செய்யும் நூற்பாலைகள் நூற்று ஐம்பது உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக,
சூலூர் தாலுகா செய்தியாளர்,
ர.சுப்ரமணியம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக