ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் இரத்ததான முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 பிப்ரவரி, 2026

ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் இரத்ததான முகாம்.

ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. 

கல்லூரி தாளாளர் காபிரியேல் தேவயிரக்கம் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கல்லூரி துணை முதல்வர் ஆக்னஸ் பிரேமா மேரி முன்னிலை வகித்தார். 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவர் டாக்டர் வைதேஸ், கிராம நிர்வாக அலுவலர் சிவராமன், சுகாதார ஆய்வாளர் ஞானராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பரமசிவன் கலந்து கொண்டனர். 

மாணவர்களை ஊக்கப்படுத்த கல்லூரி தாளாளர் அவர்கள் இரத்ததானம் வழங்கினர். 

இதில் சுமார் 100 மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் அறிவுறுத்தலின் படி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஞானசெல்வன், ஜாப்னி பென்சியா மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad