குடியாத்தம் தமிழ்நாடு தீயணைப்பு துறை அலுவலகத்தில் தனியார் செக்யூரிட்டி களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வுமுகாம்
குடியாத்தம் ,பிப் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு
துறை இயக்குனர் சீமா அகர்வால் இ கா பா அவர்களின் உத்தரவுப்படி, வேலூர் வடமேற்கு மண்டலம் துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் சீரிய உத்தரவுக்கு இணங்க, வேலூர் மாவட்ட அலுவலர் ச. வடிவேலு அவர்கள் அறிவு ரைப்படி குடியாத்தம் தீயணைப்பு துறை அலுவலகத்தில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில். பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
அதன்படி , வேலூர் மாவட்டத்தில் பணி புரிந்து வரும் தனியார் செக்யூரிட்டிககள் பாதுகாவலர்களுக்கு இலவசமாக தீ பாது காப்பு விழிப்புணர்வு வகுப்பு செயல் முறைவிளக்க பயிற்சி, மற்றும் சான்றிதழ் கள், இலவசமாக வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக