தாராபுரத்தில் ஆதரவற்றோர் உடல் அடக்கம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 பிப்ரவரி, 2026

தாராபுரத்தில் ஆதரவற்றோர் உடல் அடக்கம்



 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஏஜிபி அப்துல் கலாம் சமூக நல  அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் அடையாளம் தெரியாத  உடல்களை காவல்துறையின் அனுமதி உடன் உடல் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது அதில் இன்று238 வது உடலை தாராபுரம் நகரம் நேதாஜி நகரில் வசித்து வந்த சுப்பிரமணி வயது 57 ஆதரவற்ற நிலையில் இருந்து வந்தார் உடல் நலம் குன்றி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக இறந்துவிட்டார்.அவரின் உடலை பெறுவதற்கு உறவினர்களோ யாரும் வராத காரணத்தால் தாராபுரம் காவல் துறை ஆய்வாளர் ராமச்சந்திரன், துணை காவல்துறை ஆய்வாளர் ஜெயக்குமார், தலைமை காவலர் கோதண்டராமன், ஆகியோரின் ஒத்துழைப்புடன் தாராபுரம் ஏஜிபி அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை  சார்பாக  238 வது உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை அமைப்பின் சார்பில் தலைவர் 

ஏ.சையதுஅபுதாஹிர் செயல்தலைவர் சிவசங்கர், சமூக ஆர்வலர் ஜாபர்சாதிக், பத்திரிகையாளர் அக்கீம், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்,சாதிக், ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad