வடசேரி பேருந்து நிலையத்தில் போதுமான நேர குறிப்பாளர்கள் இல்லாததால் பேருந்துகள் திட்டமிட்ட நேரத்தில் இயக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. நடத்துனர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதனால் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் சிரமம் அனுபவிக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். உடனடியாக போதுமான நேர குறிப்பாளர்களை நியமிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக