நாசரேத், பேருந்து நிலையம் முன்பு, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு மறைவையொட்டி நேற்று 27.02.26 மாலையில் அவருக்கு செவ்வணக்கம் செலுத்தும் விதமாக, பல்வேறு கட்சி அமைப்பினர் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் மண்ணில் வாழ்ந்து மறைந்த அவரின் சாதனைகள், அவர் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராஜ், மதிமுக சார்பில் வே. இரஞ்சன், எழுத்தாளர் கன்னகுமார விஸ்வரூபன், விசிக, காங்கிரஸ் உட்பட பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக