மாநில அளவிலான துளிர் வினாடிவினா போட்டிகளில் பங்கேற்க வேலூர்மாவட்டத் திலிருந்து மாணவர்கள் பயணம் !
வேலூர் , பிப் 7 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளிக்கல்வித்துறை இணை ந்து மாநில அளவிலான துளிர் & ஜந்தர் மந்தர் வினாடி வினாப் போட்டிகள் 08-02-2026 ஞாயிறு அன்று நெய்வேலி என்எல் சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற உள்ளது. அறிவியல் கணிதம் வானவியல் அறிவியல் தொழில்நுட்பம் அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்ட பல் வேறு தலைப்புகளில் வினாடி வினா போட்டி தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடைபெறுகிறது. மாநில போட்டியில்
இளநிலை ( 6,7,8 வகுப்பு )உயர்நிலை ( 9 & 10) முதுநிலை ( 11&12) ஆகிய மூன்று பிரிவுகளில் மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த குழுக்கள் பங்கேற்க வேலூர் மாவட்டத்தில் இருந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி லத்தேரி மற்றும் கே வி குப்பம் குடியாத் தம் ஆர் எஸ் மேல்நிலைப்பள்ளி பேர ணாம்பட்டு பெரியதாமல் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேலூர் வள்ளல் கிருஷ்ணசாமி முதலியார் அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து 27 மாணவ மாணவி களும் 5 ஆசிரியர்களும் 6 அறிவியலை இயக்க நிர்வாகிகளும் இன்று பிற்பகல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற னர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப் பாளர்முத்து சிலுப்பன் செயலாளர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் ஆகி யோர் வழயனுப்பி வைத்தனர். மாவட்ட நிர்வாகிகள் வி.செல்வராஜ் பி.ரவீந்திரன் ப. ராஜேந்திரன், பெ.ராமு பி.சுகுமார் ஆடியோ ப.சேகர், கலைச்செல்வன் ஆகியோர் உடன் புறப்பட்டு சென்றனர்.
டிசம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக் கப்பட்ட இந்த போட்டிகள் கடும் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன எனவே இந்த போட்டிகள் நாளை ஞாயிற்றுக் கிழமை நெய்வேலி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123/9894884876
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக