குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் பங்கேற்பு !
குடியாத்தம் ,பிப் 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோத னை முகாம் ரோட்டரி அரங்கில் நடை பெற்றது இதில் ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே.கே. என். பழனி கல்வியாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் மூத்த வழக்கறிஞர் கே.எம்.பூபதி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவர் களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து முகாமினை தொடங்கி வைத்தனர் இதில் கோவை சங்கரா கண் மருத்துவ மனையின் சிறப்பு மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு தூரப்பார் வை கிட்டப்பார்வை கண்ணில் சதை வளர்ச்சி கண் புரை நீக்குதல் தொடர் ஓற்றைத் தலைவலி உள்ளிட்ட கண் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித் தனர் இம் முகாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் இதில் 180 பேர் தேர்வு செய்யப்பட்டு கண் அறுவை சிகிச்சைகாக கோவைக்கு அனுப்பினர் முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ரோட்டரி சங்க தலைவர் சந்திரன், கண் சிகிச்சை சேர்மன் ரவிச்சந்திரன் மற்றும் முகாம். ஒருங்கிணைப்பாளர்கள். சி கண்ணன். பி எல் என் பாபு. என் சத்திய மூர்த்தி என் எ குமரகுரு. இதில்
முன்னாள் ஆளுநர் ஜே கே என் பழனி. டாக்டர் . பி சசிரேகா டாக்டர் தீபக் அவினாஷ் டாக்டர் பி அஸ்வினி டாக்டர் விக்னேஷ் தருண்குமார் குடும்பத்தினர் ஜே கே நடேசன் ஜெயலட்சுமி அம்மாள் அவர்களின் நினைவாக இம்மாதம் முகாம் நடைபெற்றது ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக