விவசாயிகளுக்கு தொழில் நுட்பம் குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல் முறை விளக்கம் !
குடியாத்தம் , பிப் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை மற்றும் பிற கிராமங்களில் உள்ள சிறு குரு மற்றும் பெரு விவசாயி களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பையூர். கிருஷ்ணகிரி. நான்காம் ஆண்டு மாண வர்கள் ஊரகத் தோட்டக்கலை பணி அனு பவம் மற்றும் தொழில்துறை இணைப் பின் கீழ் விவசாயிகளிடம் சென்று. தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் அளித் தனர் தென்னை மரம் ஏறும் கருவி குறித்து செயல்முறை விளக்கம்விவசாயி களுக்கு செய்து காட்டப்பட்டது தென்னை மரம் ஏறுவது. பெரும்பாலும் அபாயகர மானதும் அதிக உடல் உழைப்பு தேவைப் படும். பணியாகும். இதனை . எளிதாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தென்னை மரம் ஏறும் கருவி குறைந்த. நேரத்தில் பாதுகாப்பாக மரம் ஏற உதவு கிறது குறிப்பாக வயதான விவசாயி களுக்கும் பெண் விவசாயிகளுக்கும் தொழிலாளர்கள் கிடைக்காத சூழ்நிலை யிலும் இந்த கருவி மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என மாணவர்கள் விளக்கி னார்கள் நிகழ்ச்சியின் போது மாணவர் கள் கருவிய பயன்படுத்தும் முறை பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் ஆகியவற்றை தெளிவாக எடுத்து ரைத்தனர் பின்னர் . கருவியை பயன் படுத்தி மரம் ஏறும் முறையை நேரடியாக செய்தி காட்டினார்கள். விவசாயிகள் இந்த தொழில்நுட்பத்தை பாராட்டி. இது தங்களின் வேலையை எளிதாக்கும் என்றும் செலவை குறைக்கும் என்றும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் சமூக பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தத்துடன் நவீன வேளாண் மை தொழில்நுட்பத்தைகளை விவசாயி களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக அமைந்தது என தெரிவித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக