குவிக்கப்பட்ட குழாய்கள் - கவனிக்காத அதிகாரிகள் - ஆபத்தில் மக்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

குவிக்கப்பட்ட குழாய்கள் - கவனிக்காத அதிகாரிகள் - ஆபத்தில் மக்கள்.

குவிக்கப்பட்ட குழாய்கள் - கவனிக்காத அதிகாரிகள் - ஆபத்தில் மக்கள்!

நாகர்கோவில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வெட்டூர்ணிமடம் WCC சாலை ஓரமாக குவித்து வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான குழாய்கள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறி வருகிறது. 

சாலையோரத்தில் முறையாக தடுப்பு ஏற்பாடுகள் இன்றி வைக்கப்பட்டுள்ள இந்த குழாய்கள் நாளுக்கு நாள் சாலையை நோக்கி நகர்ந்து தற்போது வெள்ளை கோட்டையும் தாண்டி வந்துள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் மற்றும் அதிக போக்குவரத்து நேரங்களில் இந்த குழாய்கள் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரிவதில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

இது போன்ற அலட்சியமான செயல்பாடுகள் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.
 சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை.
விடுத்துள்ளனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad