சாலை பணியால் குழியில் சிக்கிய வாகனம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

சாலை பணியால் குழியில் சிக்கிய வாகனம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி.

எச்சரிக்கை பதாகை வைக்காமல் நடைபெறும் சாலை பணியால் குழியில் சிக்கிய வாகனம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி.

நாகர்கோவில் பால்பண்ணையில் இருந்து சில நிமிடங்களில் வெட்டுனிமடம் செல்ல வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாக கிறிஸ்து நகர் சாலை உள்ளது.

இந்த சாலையில் குடிநீர் இணைப்பு குழாய் பழுதுபப்பட்டு உள்ளது இதனை சரி செய்யும் பணி நடைபெறுகிறது.
 ஆனால் சாலை பணி நடைபெறும் போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக சாலை பணி நடைபெறுகிறது மாற்று பாதையில் செல்லவும் என்கின்ற எச்சரிக்கை பதாகை வைக்காமலும், 

இரு புறமிருந்து வரும் வாகனங்களை நிறுத்தி எச்சரிக்கை செய்ய பேரிகார்ட் வைக்காமலும் குடிநீர் உடைப்பு சரி செய்ய சாலையில் பள்ளம் தோண்டி அப்படியே விட்டு விட்டதால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பணி நடைபெறுவதை அறியாமல் அப்பகுதியில் வந்து சாலை துண்டிக்கப்பட்டு உள்ளதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் அவ்விடத்தில் வாகனங்களை திருப்பி செல்கின்றனர்.

சில வாகன ஓட்டிகள் பணிக்காக தோண்டி போடப்பட்டுள்ள குழியின் அருகில் இருக்கும் சாலை வழியாக செல்ல முற்படும்போது வாகனங்கள் அதில் புதைையுண்டு சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகி பொதுமக்கள் உதவியுடன் தங்கள் வாகனங்களை மீட்டு திரும்பி செல்கின்றனர். 

இந்த சாலையில் தான் நாகர்கோவில் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினரும் மன்ற தலைவருமாக இருந்து வருபவரின் குடியிருப்பும் உள்ளது.

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுமக்களின் தேவை அறிந்து செயலாற்ற வேண்டிய மாமன்ற உறுப்பினர் இதனை கண்டும் காணாதவராய் இருந்து வருவது அவருக்கு பொதுமக்கள் மீது அக்கறை இல்லை என்பதை காட்டுவதாகவே உள்ளது என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad