குமரி மாவட்ட எஸ்பி க்கு பெற்றோர்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

குமரி மாவட்ட எஸ்பி க்கு பெற்றோர்கள் கோரிக்கை.

குமரி மாவட்ட எஸ்பி க்கு பெற்றோர்கள் கோரிக்கை.

சமீப நாட்களாக குமரியில் புது விதமான போதை பொருட்கள் நடமாட்டம் காவல்துறையின் சோதனைகளில் சிக்குவதும் காவல்த்துறை அதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதும் செய்திகள் மூலமாக தெரியவருகிறது.

நாகர்கோவிலில் ஒரு பிரபலமான கல்லூரி கலையரங்கம் பின்புறம் மறைவான பகுதியில், ஊசி மருந்துகள் கிடந்ததாக ஊடக செய்திகளில் காணமுடிந்தது. 

அதை பார்க்கும் போது மனதுக்கு பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. கல்லூரி வளாகத்திலேயே இளைஞர்கள் போதை பொருட்களுக்கு, 

அடிமையாகி வருகிறார்கள் என்றால் எதிர்காலத்தில் குமரி இளைஞர்களின் நிலை என்ன என்பதை எண்ணி பார்த்தால், பெற்றோர்களுக்கு கல்லூரிகளுக்கு பிள்ளைகளை அனுப்பவே அச்சப்படக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

ஆகையால் குமரி மாவட்டத்தில் குற்றம் இளைப்பவர்களுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்கிவரும் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், சென்னை, கோவையை போன்று, குமரி மாவட்டத்திலும் மாணவர்களின் விடுதிகளை திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு மாணவர்களிடம் போதை பழக்கம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க மாணவர்களின் எதிர்காலம் கருதி பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad