குடியாத்தத்தில் ஒன்றிய அரசை கண்டி த்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 பிப்ரவரி, 2026

குடியாத்தத்தில் ஒன்றிய அரசை கண்டி த்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் !

குடியாத்தத்தில் ஒன்றிய அரசை கண்டி த்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் ,பிப் 9 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடப்பு மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ கத்தை புறக்கணித்த ஒன்றிய அரசைக் கண்டித்தும்,இந்திய எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை பாராளுமன்றத் தில் பேச விடாமல் தடுத்து ஜனநாயக படுகொலை செய்த சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட மோடி அரசைக் கண்டித் தும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் காங்கி ரஸ் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் (08.02.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியள வில் குடியாத்தம் புதிய பேருந்து நிலை யம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலை வர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கி னார். மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், சேகரன், பாஸ்கரன், பாரத் நவீன்குமார், யுவராஜ், பூபதிராஜா, ஆகியோர் முன்னி லை வகித்தனர் குடியாத்தம் நகர காங்கி ரஸ் கமிட்டி பொறுப்பு குழு உறுப்பினர் டாக்டர். நவீன்பிரபு வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் மாநில பேச்சாளர் துரை. முருகேசன், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் . கிருஷ்ணவேணி ஜலந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வீராங்கன், சங்கர், ஜோதி கணேசன், விஜயகுமார், நித்தியானந்தம், தனசேக ரன்  வட்டார பொறுப்பாளர்கள் ஆரோன், பாபு, பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹமத், பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் பாஷா, மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ், மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல், மாநில RGPRS துணைத் தலைவர் ராஜசேகரன், மாநில சிறுபான்மையினர் பிரிவு ஒருங் கிணைப்பாளர் MD.ராகிப், மாநில ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் ஜலேந்திரன், மற்றும் பள்ளிகொண்டா பேரூர் இளை ஞர் காங்கிரஸ் தலைவர் சிக்கந்தர் பாஷா, இலியாஸ் பாஷா ‌நிர்வாகிகள் ரங்கநாதன், சத்தியமூர்த்தி, மனோகரன், ஸ்டாலின், ராஜேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் நன்றியுரை கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad