பொள்ளாச்சியில் இன்று 22.2.2026.
பல்வேறு நல திட்ட உதவிகளுக்காக, பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்காகவும், மாண்புமிகு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொள்ளாச்சிக்கு வருகை புரிந்தார் ..!!
பொள்ளாச்சியில் இன்றைய தினம் நடைபெற்ற அரசு விழாவின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சுமார் ரூ.36 கோடி மதிப்பில் சாலைப்பணிகள், சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, குடிநீர் குழாய் அமைப்பது உள்ளிட்ட 59 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு,
ரூ.72.10 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள துணை சுகாதார மையம், நியாய விலைக்கடை உள்ளிட்ட 3 பணிகளை இன்று திறந்து வைத்ததோடு,
பொள்ளாச்சி நகர மக்களின் போக்குவரத்து வசதிக்காக ரூ 9.83 கோடி மதிப்பில் பொள்ளாச்சி நகராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைத்தார் மற்றும் கழக மக்களவை உறுப்பினர் K ஈஸ்வர சாமி அவர்களின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொள்ளாச்சியில் இன்று திறந்து வைத்தார் மற்றும் ,பொள்ளாச்சியில் உள்ள கோவை பல்லடம் சாலையை இணைக்கும் புதிய திட்டச்சாலைக்கு ஐயா பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டு புதிய சாலையை பொள்ளாச்சியில் இன்று துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
மற்றும் கழக முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி. R




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக