வெள்ளகோவில்–காங்கேயம் பகுதியில் அசோக் லேலண்ட் வாடிக்கையாளர் சந்திப்பு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

வெள்ளகோவில்–காங்கேயம் பகுதியில் அசோக் லேலண்ட் வாடிக்கையாளர் சந்திப்பு விழா



 வெள்ளகோவில்–காங்கேயம் பகுதியில் அசோக் லேலண்ட் வாடிக்கையாளர் சந்திப்பு விழா

புதிய இலகுரக வாகனங்கள் அறிமுகம்; வணிகர்களின் வரவேற்பு.


திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில்–காங்கேயம் பகுதிக்கான வாடிக்கையாளர் சந்திப்பு விழா Ashok Leyland நிறுவனத்தின் சார்பில் கோவை–திருச்சி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் ஏரியா சேல்ஸ் மேலாளர்கள் ராஜ்குமார் மற்றும் ஜெகதீஷ் தலைமை வகித்தனர். நிர்வாக இயக்குநர் சங்கர், ஏஜிஎம் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் இலகுரக வாகனப் பிரிவில் புதிய “படா தோஸ்த் ஐ6” (Bada Dost i6) வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறிய வாகனமான “சாத்தி” முதல் பெரிய அளவிலான “பார்ட்னர்” வரை, எஸ்.சி.வி (SCV) பிரிவில் பல்வேறு வாகனங்கள் வழங்கப்படுகின்றன என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.


தற்போது நிறுவனத்தின் “Dost+” (தோஸ்த் பிளஸ்), “Bada Dost i5” (படா தோஸ்த் i5) மற்றும் “Saathi” (சாத்தி) உள்ளிட்ட பல இலகுரக வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் வெவ்வேறு சரக்கு தேவைகள் மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.


திருப்பூர் பகுதி மேலாளர் செந்தில்குமார், துணை மேலாளர்கள் பெரோஸ், தினேஷ், ஜீவானந்தம், ஜான் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த வாடிக்கையாளர்கள் புதிய வாகனங்களை பார்வையிட்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர். தாராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்திருந்த வாடிக்கையாளர்களிடமும் நிறுவன ஊழியர்கள் நேரடியாக கருத்துக்களை கேட்டறிந்தனர்.


நிகழ்ச்சி நிறைவில் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. சிறந்த வாடிக்கையாளர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான நிறுவன ஊழியர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad