பிப்.21- தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காலான்கரையை சேர்ந்த ஊர்காவலன் மகன் பெரியநாயகம் (33) இவர் சிலிண்டர் சப்ளையர் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனது உறவினர்களுடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். தனது குடும்பத்துடன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது வரும் வழியில் ஈராலில் உறவினர்கள் டீ குடிக்க வாகனத்தை நிறுத்திய போது தூங்கிக் கொண்டிருந்த பெரியநாயகத்தை மர்ம நபர்கள் அருளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பெரியநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக