கும்பாபிஷேக விழாவிற்கு சீர் வரிசைகள் வழங்கிய இஸ்லாமியர்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

கும்பாபிஷேக விழாவிற்கு சீர் வரிசைகள் வழங்கிய இஸ்லாமியர்கள்


திருப்பூர் 15 வேலம்பாளையம் ஊருடையம்மன் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி அளவில் நடைபெற்றது இதையொட்டி 15 வேலம்பாளையம் மஜீத்தே இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஜமாத்தார்கள் சார்பில் ஊருடையம்மன் கோவிலுக்கு சீர் வரிசைகள் வழங்கப்பட்டது


 முன்னதாக 15 வேலம்பாளையம் மஜீத்தே இக்லாஸ் பள்ளிவாசலில் இருந்து பள்ளிவாசல் தலைவர் அப்துல் சமது செயலாளர் முகமது ரஃபீக் பொருளாளர் சித்திக் மற்றும் நிர்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மதரஸா பள்ளி மாணவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் 11 சில்வர் தட்டுகளில்  மாலைகள்  பழவகைகள் தேங்காய்கள் இனிப்பு வகைகள் ஆகியவற்றை சீர்வரிசைகளை எடுத்து கொண்டு  சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று 15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஊருடையம்மன் கோவிலுக்கு சென்றனர் இஸ்லாமியர்கள் அனைவரையும் முறைப்படி கோவில் வாசலில் வரவேற்றனர் அப்போது மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகளிடம் வெற்றிலை சந்தனத்தையும் தட்டுகளில் கொண்டு வந்திருந்த சீர் வரிசைகளையும் வழங்கினர் இதை அடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் இஸ்லாமியர்கள் கோவில் கமிட்டி நிர்வாகிகள் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் திருப்பூரில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஊருடையமன் கோயிலுக்கு மஜித்தே இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் மதரஸாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக சீர் வரிசைகள் வழங்கிய நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாக பொதுமக்கள் பரவலாக மகிழ்ச்சியாக பேசிக்கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் 

அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad