பொதுத்தேர்வு விழிப்புணர்வு மற்றும் இலக்கு அமைக்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

பொதுத்தேர்வு விழிப்புணர்வு மற்றும் இலக்கு அமைக்கும் நிகழ்ச்சி.

பொதுத்தேர்வு விழிப்புணர்வு மற்றும் இலக்கு அமைக்கும் நிகழ்ச்சி 

திருநெல்வேலியில் – பொது தேர்வு விழிப்புணர்வு மற்றும் இலக்கு அமைக்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையாற்றினார்.
ஸ்ரீ கலைமகள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் S K குளோபல் எஜுகேஷன் நிர்வாக இயக்குநர் எஸ்.ஜே. சிவா கலந்து கொண்டு மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலையும், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை குறித்த பயனுள்ள குறிப்புகளை வழங்கினார். 

தொடர்ந்து மாணவர்களின் கனவுகளை இலக்காக மாற்றும் முறைகள் விளக்கமாக எடுத்துறைக்கப்பட்டன
பெற்றோர்களும் மாணவர்களின் முன்னேற்றத்தில் தங்கள் பங்கினை உணர்ந்து உறுதியளித்தனர்.

நிகழ்ச்சி முழுவதும் உற்சாகமான மற்றும் நேர்மறையான சூழல் நிலவியது.
இந்த நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கான புதிய துவக்கமாக அமைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்நேகா மைண்ட் கேர் சென்டர் மேலாளர் மைக்கேல் செய்திருந்தார். 

இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad