விளவங்கோடு வட்டம் சிதறால் கிராமத்தில் இன்று மதியம் நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவட்டார் மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்த திபின் பென்சிகர் (20) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. மோதி ஏற்பட்ட தாக்கத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அருமனை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக