திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி உடுமலைப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் கணியூர் காவல் ஆய்வாளர் திருமதி பஞ்சுலக்ஷ்மி அவர்கள் தலைமையில் கணியூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் மற்றும் போலீசார் இணைந்து கணியூர் வெங்கடகிருஷ்ணா அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் தொடர்பாக கஞ்சா, புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், தீமைகள் பற்றி எடுத்துரைத்தும் போதை பொருள் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றியும் பள்ளி மாணவ மாணவியருக்கு அறிவுரை வழங்கினார், இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். கணியூர் காவல் துறையினர் தொடர்ந்து இதுபோன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதை கணியூர் பொதுமக்கள் சார்பாகவும்,பள்ளி துறை சார்பாகவும் திருப்பூர் மாவட்ட காவல் துறையினருக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக