தூத்துக்குடியில் பரிதாபம் லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் பரிதாபம் லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி.

தூத்துக்குடியில் பரிதாபம் லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

பிப். 20- தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் பிச்சையா மகன் டிராபின்(25). இவர் நேற்றிரவு தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி பைக்கில் சென்றார். 

முத்தையாபுரம் வடக்கு தெரு சந்திப்பில் சென்றபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதியது. இதில் டிராபின் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்து முத்தையாபுரம் போலீசார், சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad