“வந்தே மாதரம் கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி” - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 பிப்ரவரி, 2026

“வந்தே மாதரம் கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி”

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) தேசிய அளவிலான மக்கள் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு முயற்சியாக “வந்தே மாதரம் கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி” நடத்தியது. 

கூடன்குளம் நுழைவுவாயிலில் இருந்து CISF உதவி தளவாய் சித்தாந்த் கோ சுவாமி தலைமையில் 25 பேர் சைக்கிளிலும், 60 பேர் வாகனங்களிலும் புறப்பட்டனர். 

ஆரோக்கியபுரம் வழியாக சின்னமுட்டம் துறைமுகம் சென்ற அவர்களுக்கு கடலோர பாதுகாப்பு ஆய்வாளர் சாந்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad