தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலத் தில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலத் தில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு

 தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலத் தில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு 
வாணியம்பாடி, பிப்.21-
 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்த போது அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதை கண்டு ஜேசிபி ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து கிராமிய காவல் துறையி னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீசார் பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோத னைக்காக வாணியம்பாடி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்இதனை தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் வர வழைத்து அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுத்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்தும், இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல கோணங்களில் போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad