பனையேறி மற்றும் தமிழக விவசாயி களின் உரிமை மீட்பு சங்கத்தினர் காவல் நிலையத்தை முற்றுகை - இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு !
திருவண்ணாமலை , பிப் 19 -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா புதுப்பாளையம் அடுத்த நாகப் பாடி கிராமத்தில் பனை மரத்தில் கள் இறக்கி விற்பனை செய்த வேலு, முனியப் பன், ஏழுமலை ஆகிய மூன்று பேர் மீது G5 புதுப்பாளையம் போலீசார் கைது செய்து போலி விச சாராய வழக்கு பதிவு செய்த தை கண்டித்து பனையேறிகள் மற்றும் தமிழக விவசாயிகளின் உரிமை மீட்பு சங்கத்தினர் புதுப்பாளையம் காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதானல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தகையில், நாங்கள் மக்கள் நலனுக் காக உயிரூடமுள்ள ஊட்டச்சத்து மிகுந்த விவசாய உற்பத்தியான கள்ளில் நாங் கள் எவ்வித போதைப்பொருள் பொருட் களை நாங்கள் பயன்படுத்துவதில்லை என உறுதியளித்தனர்.பின்னர் ஏழு வகையான கோரிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை போலீசாரிடம் வழங்கினார் கள்.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் T.R.கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக