ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து ஆணையர் கிரண் குராலா உத்தரவிட்டார்.
ரேபிடோ, ஊபர், போர்ட்டர் செயலிகள் மூலம் சரக்கு ஏற்றிச் செல்லப்படுவதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் திடீர் சோதனை நடத்தி, சம்பந்தப்பட்ட செயலிகள் வாயிலாக இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பறிமுதல் விவரங்களை ஆணையரகத்திற்கு தெரிவிக்கவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் சரக்குகளை எடுத்துச் செல்ல பதிவு செய்யும் வசதியை நீக்க வேண்டும் என நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக