பிப்.21- தூத்துக்குடி டுவிபுரத்தில்
தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி, அதனை கட்டுப்படுத்தத் தவறியதாக கூறி திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் சக்திவேல் மாவட்ட பொது செயலாளர் ராஜேஷ் மாவட்டத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் ஏ என் ஆர் ராஜா கண்ணன் ரவிசந்திரன் மற்றும் அணி பிரிவு தலைவர்கள் வெள்ளத்தாய் ஜெயக்குமார் சின்ன தங்கம் மணிகண்டன் பாலாஜி மற்றும் தெற்கு மண்டல் தலைவர் மாதவன் வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக