எம். சவேரியார்புரத்தில்புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 பிப்ரவரி, 2026

எம். சவேரியார்புரத்தில்புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் எம். சவேரியார்புரத்தில்
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை 

பிப். 26- வருகின்ற ஏப்ரல் 3-ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ள புனித வெள்ளியன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி எம். சவேரியார்புரம் ஆலயத்தில் பேனர் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சபை மக்கள் கூறுகையில், கிறிஸ்தவர்களின் மிக முக்கிய நம்பிக்கையான இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூரும் புனித வெள்ளி அன்று, கிறிஸ்தவர்கள் இரத்ததான முகாம்கள் நடத்துதல், சிலுவைப் பாதை ஊர்வலங்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். 

இந்த நாளை ஒரு தியாக நாளாகக் கடைபிடிப்பதால், அன்று மதுக்கடைகளை மூட வேண்டியது அவசியமாகும்.

தமிழகத்தில் மகாவீர் ஜெயந்தி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு நாள் போன்ற தினங்களில் மதுக்கடைகள் மூடப்படுவதை போல அந்தப் பட்டியலில் புனித வெள்ளியையும் சேர்க்க வேண்டும் என்றும், தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளைக் குறைத்தல் மற்றும் மது போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

மக்களின் சமய கலாச்சார விழாக்களின் மாண்பைக் காக்க அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad