கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் மூலம் 10 கோடி மோசடி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 மார்ச், 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் மூலம் 10 கோடி மோசடி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் மூலம் 10 கோடி மோசடி.

களியக்காவிளை அருகே நிதி நிறுவனம் நடத்தி வந்த ஜெய் சேகர், கலா தம்பதியினர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நிறுவனங்களை மூடி குடும்பத்துடன் தலைமறைவானார்கள். 20 ஆண்டுகளாக நடந்த இந்த நிறுவனத்தில் பலர் பணம், நகை வைப்பு செய்திருந்தனர்.

அறுபதுக்கும் மேற்பட்டோர் ஒரு லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை சேமித்த பணம் சேர்த்து சுமார் பத்து கோடி மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைமறைவானவர்களை கைது செய்து பணத்தை மீட்டுத் தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad