தாராபுரம் -குண்டடம் நால்ரோடு அருகே நூல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது — ரூ.20 லட்சம் மதிப்பிலான நூல்கள் நாசம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 31 மார்ச், 2026

தாராபுரம் -குண்டடம் நால்ரோடு அருகே நூல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது — ரூ.20 லட்சம் மதிப்பிலான நூல்கள் நாசம்.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் நால்ரோடு பிரிவு பகுதியில், நூல் ஏற்றிச் சென்wதாராபுரம் -குண்டடம் நால்ரோடு அருகே நூல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது — ரூ.20 லட்சம் மதிப்பிலான நூல்கள் நாசம்.

👌🏻e

M

ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமானது.


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் உள்ள சண்முகவேல் மில்லில் இருந்து, கருவராயன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் அங்கமுத்து, அசோக் லைலாண்டு லாரியில் எட்டு டன் நூல்களை ஏற்றி, திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை மில்லிற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். தாராபுரம் வழியாக குண்டடம் நால்ரோடு பிரிவு பகுதிக்கு வந்தபோது, அதிக வெப்பத்தால் லாரியின் சைலன்சர் பகுதியில் இருந்து எழுந்த தீப்பொறி, மேலே ஏற்றியிருந்த நூல் மூட்டைகளின் மீது பட்டு, திடீரென தீப்பிடித்தது.


சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் இதை கவனித்து, லாரி ஓட்டுனர் அங்கமுத்துவிடம் தெரிவித்தனர். உடனே அவர் வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ வேகமாகப் பரவி, கரும்புகையுடன் எரியத் தொடங்கியது. தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அங்கமுத்துவுக்கு கை, கால், முகம் போன்ற இடங்களில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.


இதையடுத்து அப்பகுதி மக்கள் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீர் பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றும், நூல் மூட்டைகள் அதிகமாக இருந்ததால் தீ நீண்ட நேரம் எரிந்தது.


இந்த சம்பவம் குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேக்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் புறவழிச் சாலை பகுதியில் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad