தாராபுரத்தில் தவெக நிர்வாகிகள் 20 பேர் திமுகவில் இணைப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 31 மார்ச், 2026

தாராபுரத்தில் தவெக நிர்வாகிகள் 20 பேர் திமுகவில் இணைப்பு.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தமிழக வெற்றி கழகம் (தவெக) வடக்கு நகரச் செயலாளர் ரமேஷ் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.


இந்த இணைப்பு நிகழ்ச்சி தாராபுரத்தில் திமுக நகர அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட பொறுப்பாளர் இல. பத்மநாபன், தாராபுரம் திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி, நகரக்  செயலாளர் முருகானந்தம், நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் ஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது, தவெகவிலிருந்து விலகிய அனைவருக்கும் திமுக வின் கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து திமுகவில் இணைத்தனர்.


இதுகுறித்து,தவெக வடக்கு நகரச் செயலாளர் ரமேஷ், நகரப் பொருளாளர் பிரபு, நகரத் துணைச் செயலாளர் உமாதேவி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


“கடந்த 18 ஆண்டுகளாக தவெக தலைவர் விஜயின் ரசிகர்களாகவும், அக்கட்சியின் தீவிர தொண்டர்களாகவும் பணியாற்றி வந்தோம். அண்மைக்காலமாக கட்சியின் சில நிர்வாகிகளின் செயல்பாடுகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் எங்களைப் போன்ற வாழ்நாள் உறுப்பினர்களை உதாசீனப்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சில சமுதாயத்தினருக்கு மட்டும் முன்னுரிமை அளித்து, மற்றவர்களை பின்தள்ளும் மனப்பான்மையுடன் செயல்படுவதாக எங்களுக்கு தோன்றியது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால், எங்கள் வடக்கு நகரப் பகுதியில் தவெக அமைப்பை கூண்டோடு கலைத்து, அனைவரையும் சமமாக மதித்து அரவணைக்கும் திமுக தலைமையின் கீழ் இணைந்துள்ளோம். திமுக வேட்பாளரின் வெற்றிக்காக தொடர்ந்து உழைப்போம்” என தெரிவித்தனர்.


நிகழ்ச்சியில், நகர திமுக அவைத்தலைவர் கதிரவன், நகர துணைச் செயலாளர் தவச்செல்வன், வார்டு செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad