அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி யில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமைசேர்த்த ஆய்வாளருக்குபாராட்டு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 ஏப்ரல், 2026

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி யில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமைசேர்த்த ஆய்வாளருக்குபாராட்டு

அகில  இந்திய துப்பாக்கி  சுடும் போட்டி யில் தங்கம் வென்று  தமிழகத்திற்கு பெருமைசேர்த்த ஆய்வாளருக்குபாராட்டு 
தஞ்சாவூர் , ஏப்ரல் 1 -
             தஞ்சாவூர் மாவட்டம் ஆய்வாளர் அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டி யில் தங்கப் பதக்கம் என்று தமிழகத்திற் கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த தஞ்சாவூர் தாலுகா துலுக்கம்பட்டி யை சேர்ந்த ஆய்வாளர் K. சிவகுமார் அவர்களுக்கு காவல்துறை மற்றும்பொது மக்கள் தன்னார்வலர்கள் சார்பில் பாரா ட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி யில் தங்க பதக்கம் வென்று தமிழகத்திற் கும் தஞ்சைக்கும் பெருமை சேர்த்த தஞ்சாவூர் தாலுக்கா துலுக்கம்பட்டியை சேர்ந்த ஆய்வாளர் K.சிவகுமார் அகில இந்திய காவல் துறை அளவில்  நடை பெற்ற துப்பாக்கி சுடும் போட்டி டெல்லி க்கு அருகில் உள்ள குருகிராம் என்ற மாவட்டத்தில் நடைபெற்றது.இந்த போட்டி 22/3/26முதல் 30/3/26 வரை 8- நாட்கள் நடைபெற்றது இதில் மூன்று வகையான துப்பாக்கி பிரிவில் போட்டிகள்  நடை பெற்றது,இதில் VIP  பாதுகாப்பு துப்பாக்கி ரகமான MP-5 துப்பாக்கி சுடுதல் பிரிவில் தஞ்சை தாலுக்கா துலுக்கன் பட்டி கிரா மத்தை சேர்ந்த கலியபெருமாள் லலிதா இவர்களின் மகன் இன்ஸ்பெக்டர் K.சிவக் குமார் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் , தஞ்சை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார், வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும்  மத்திய காவல் துறை தலைவர் G.P. சிங்  வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும்  தெரிவித்தார்.
இந்திய அளவில் தங்க பதக்கமும், கோப்பையும் இரண்டாவது முறையாக பெற்று இந்திய அளவில் சேம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்.  தமிழ்நாட்டிற் கும் தஞ்சாவூர் மாவட்த்திற் கும் பெருமை சேர்த்த மண்ணின் மைந் தரை கிராம மக்களும் சக பணியாளர் களும் வாழ்த்து க்களை தெரிவித்தும் பாராட்டியும் வருகின்றனர்.

தமிழக குரல் செய்தியாளர் மு. பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad