ஜோலார் பேட்டை நகர கூட்டுறவு வங்கி யில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப் பட்ட 23.50சவரன் தங்க நகை அபேஸ்!
ஜோலார்பேட்டை , மார்ச் 7 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகர கூட்டுறவு வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட 23.50சவரன் தங்க நகை அபேஸ்! ஒரு வருட காலமாக நடையா நடக்கிறோம்! ப்ராப்பர் இன்வே ஸ்டிகேஷன் இல்ல! கதறிய பிஎஸ்என்எல் துணை கோட்ட பொறியாளர்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாபு நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மனைவி சரண்யா குமாரி (வயது 57) இவர் ஜோலார்பேட்டை நகர கூட்டுறவு வங்கியில் சுமார் 15 வருட காலமாக கணக்கு வைத்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2024 ஆம் வருடம் 29ஆம் தேதி அந்த வங்கியில் 30000 டெபாசிட் மற்றும் வருடாந்திர தொகை 2360 ரூ செலுத்தி நகைகளை வைக்க பாதுகாப்பு பெட்டகம் பெற்று 30.50 சவரன் தங்க நகையை வைத்துள்ளார்.ஆனால் அந்தப் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி யை வங்கி ஊழியர் 30ஆம் தேதி கொடுத் துள்ளார். அப்போது சரண்யா குமாரி பாதுகாப்பு பெட்டகத்தை திறந்த பார்த்த போது பெட்டகத்தில் வைக்கப்பட்ட 23.50 சவரன் தங்க நகை மட்டும் காணவில்லை என அதிர்ச்சியடைந்து இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நகை மீட்டு தர கோரி எஸ்பி ஆபிஸ், DIG ,IG உள்ளிட்ட அதிகாரிகள் பல பேருக்கு மின்னஞ்சல் மூலமும் ரிஜிஸ்டர் தபால் மூலமும் புகார் அளித்து வந்துள்ளார்.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் திரும்பவும் இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு முறை புகார் அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிஎஸ்என்எல் துணை கோட்ட பொறியா ளர் நாகராஜன் கடந்த ஒரு வருடமாக எங்களுடைய நகைக்காக போராடி வருகி றேன் ஆனால் போலீசார் ப்ராப்பரான இன்வெஸ்டிகேஷன் நடத்த மாட்டங்கி ராங்க தயவுசெய்து எங்க நகையை மீட்டுத் தாங்க ஜோலார்பேட்டை நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக