மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு கூடுதல் மருத்துவமனை கட்டிடம் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், தமிழக துணை முதலமைச்சர் உடனிருந்தார். தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் Dr. நர்ணவரே மணிஷ் சங்கரராவ் (இந்திய ஆட்சிப்பணி) தலைமையேற்றார்.
விழாவில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், தாராபுரம் நகராட்சி தலைவர் திரு பாப்புகண்ணன், அரசு தலைமை மருத்துவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், தாராபுரம் நகராட்சி ஆணையர், அரசு தலைமை மருத்துவர், மருத்துவத்துறை சார்ந்த செவிலியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நகர ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், துணை செயலாளர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நகர கழக பிரதிநிதிகள், நகர கழக நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சார்ந்த அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
புதிய மருத்துவமனை கட்டிடம் மூலம் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மேம்பட்ட மருத்துவ சேவைகளை எளிதில் பெறும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர் சாதிக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக