பெங்களூரில் இருந்து குடியாத்தத்திற்கு பன்றி வாங்க கொண்டு வந்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 மார்ச், 2026

பெங்களூரில் இருந்து குடியாத்தத்திற்கு பன்றி வாங்க கொண்டு வந்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் !

பெங்களூரில் இருந்து குடியாத்தத்திற்கு  பன்றி வாங்க கொண்டு வந்த  4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் !
 குடியாத்தம் ,மார்ச் 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 35), சந்திப் (வயது 19), ஆகியோர் மினி வேனில் பன்றி வாங்குவதற்காக தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மதனப்பள்ளி கிராமத்திற்கு வந்துள்ளனர்.இந்நிலையில் குடியாத்தம் அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதீப் தலைமையில், தலைமை காவலர் வினோத் குமார் ,  முதல் நிலைக்.பெண் காவலர் சசிகலா ஆகியோர் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது மினி வேனை  தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில்  ஆவணம் இல்லாமல் 4 லட்சம் 20 ஆயிரம் கொண்டு வந்தது தெரிய வந்தது. பின்னர் நிலை கண்காணிப்பு குழுவினர் மினி வேன்,  பணத்தை மீட்டு குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுபலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை குடியாத்தம் கருவூலம் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது மேலும் விசாரணை யில் பன்றி வாங்குவதற்காக கொண்டு வந்த பணம் என தெரியவந்துள்ளது
இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தோஷ் விசாரித்து வருகிறார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad