திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி கௌரிசித்ரா அவர்கள், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாராபுரம், குண்டடம், மூலனூர், கன்னிவாடி, அலங்கியம், தளவாய் பட்டிணம் உள்ளிட்ட ஒன்றிய-நகர-பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த தவெக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இன்று மட்டும் தனித்தனியாக 500-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு மற்றும் வாழ்த்து பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பினால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர்.
மேலும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர் கௌரிசித்ராவை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என தமிழக வெற்றி கழக திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ் தலைமையில் தவெக தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக