பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பாங்கு வளர்க்க வானவில் மன்ற கருத்தரங்கு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 31 மார்ச், 2026

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பாங்கு வளர்க்க வானவில் மன்ற கருத்தரங்கு !

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பாங்கு வளர்க்க வானவில் மன்ற கருத்தரங்கு !
காட்பாடி , மார்ச் 31 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு பாராட்டு
அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லை யில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் ‘வானவில் மன்றம்’ திட்டம் பள்ளிக் கல்வித் துறையின் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  இந்த கல்வியாண்டில் இறுதி நிகழவாக வேலூர் மாவட்டத்தில் உள்ள கருத்தாளர் களின் பணிகளை பாராட்டி கேடையம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.வேலூர் மாவட்ட அளவிலான வானவில் மன்றத்தின் கருத்தாளர்கள் மார்ச் மாத மீளாய்வு வேலை அறிக்க சமர்பித்தல் மற்றும் கருத்தாளர்களின் பணிகளை பாராட்டி கேடையம் வழங்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிகல்வி கூட்ட அரங்கில் நடை பெற்றது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா அவர்கள் பங்கேற்று கருத்தாளர்களின் வேலை அறிக்ககளை ஆய்வு செய்தார் மேலும் அவர்களின் பணிகளை பாராட்டி தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்ட பாராட்டு கேடையங்களை வழங்கி பேசினார். வேலூர் ஒருங்கிணை ந்த பள்ளிகல்வி  உதவி திட்ட அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலை வர் முத்து.சிலுப்பன், செயலாளர் முனை வர் செ.நா.ஜனார்த்தனன் வேலூர் கிளை செயலாளர் பா.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்தியும் பாராட்டியும் பேசினர்
 வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சா.குமரன் தலைமை தாங்கி பேசினார். இணை ஒருங்கிணைப்பாளர் கே.விஸ்வ நாதன்  2025-26ஆம் கல்வி யாண்டில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகள் பரிசோத னைகள் குறித்து பேசினார் பள்ளிக்கல்வி த்துறையின் மாவட்ட  ஒருங்கிணைப் பாளர் சாந்தி மன்ற செயல்பாடுகள் குறித்து பேசினார். வானவில் மன்ற கருத் தாளர்கள் என்.சரஸ்வதி, என்.வெண்ணிலா, கே.ஷகிலா, இ.பரிமளா ஆர்.முகமது பாஷா, ஆர்.கோகுல், எஸ்.பிங்கிஷெல் சியா, எஸ்.தமிழ்வாணன், யு.சுருதி, எஸ்.கார்த்தி, பி.வினோத், ஆர்.சங்கவி, எம்.ஜமுனா, ஆர்.அருணா, இ.பரிமளா ஆகிய கருத்தளார்கள் வேலை அறிக்க சமர்பித்தனர் அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பாராட்டு கேடையம் வழங்கப்பட்டுது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad