கன்னியாகுமரி மாவட்டம்: கடந்த 20.04.2021 தேதியன்று குலசேகரம் சுருளக்கோடு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணபதி என்பவரின் மகன் சுரேஷ் 42, என்பவர், அதே பகுதியை சார்ந்த தங்கச்சன் என்பவரின் மகன் செந்தில் 41, என்பவரை வெட்டு கத்தியால் தலையில் வெட்டி உள்ளார்.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் குலசேகரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்
வழக்கு விசாரணை பத்மநாபபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று சுரேஷ் க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ 5000, அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரி, நீதிமன்ற காவலர்,
மேலும் நீதிமன்ற விசாரணையை சிறப்பாக கண்காணித்த தக்கலை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் குலசேகரம் காவல் ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக